செவ்வாய், 17 மே, 2016


          தாழ்வு  மனப்பான்மை.

இந்த உலகில் இரு சிறு மணல் துகள்கூட ஒரேமாதிரி இருப்பது இல்லை.அப்படி இருக்கும்போது மனிதர்கள் வேறுபடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

              இன்னொருவரைப்போல் நாம் இல்லையே என்றோ அவனது தந்தையைப்போல் நம் தந்தை இல்லையே என்றோ அக்கரைப்பச்சையைக் கண்டு ஏங்கி உங்களுக்குக்  கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்

                   தாழ்வு மனப்பான்மை பிறப்பதே ஒரு கற்பனையான மன நிலையில் தான். மகிழ்ச்சி ஒரு மனநிலை என்பார்கள்.Happiness is a state of mind.உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

                    தாழ்வு  மனப்பான்மை ஆக்க பூர்வமான எண்ணங்களை அழித்து விடுகின்றன. கழனியில் விளையும் பயிகளுக்கிடையே  களை எடுப்பது மிக மிக அவசியம்.அது போன்று உங்கள் மனம் என்னும் பூங்காவிலே அவ்வப்பொழுது களை எடுத்து உரமிட்டு உண்மைப் பயிர் வளர்க்க  முயற்சியுங்கள்.

சனி, 7 மே, 2016

                              தலைவனின்  மறு பக்கம்.

                தலைவன் என்பவன் யார்? அல்லது தலைமைத்தகுதி என்பது என்ன என்பதற்கு சுமார் 142 விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

                 இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து இவனே சிறந்த தலைவன் என்று நாம் தேர்ந்தெடுக்கும் போது அவனுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

                         யாருக்காக வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன? என்பது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மேலோட்டமாக பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்று வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

                                 இப்படிப்பட்ட மனித்ர்களைப்பார்த்து ஒருவன் கேட்கிறான்,


                                              தேடிச்சோறு நிதம் தின்று  
                                                           பல சின்னச்சிறு கதைகள் பேசி-மனம் 
                                              வாடித்துன்பம் மிக வுழன்று 
                                                            பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை 
                                              கூடிக் கிழப்பருவம் எய்திக்  கொடுங் 
                                                          கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் -பல 
                                               வேடிக்கை மனிதர்களைப் போல் 
                                                            நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ ?
                                                                                                                                       என்று.

              இப்படித் தனி மனிதர்கள் சிந்திக்கும் போது அவர்களின் மூலமாக உருவாகும் தலைவன் உண்மையில் போற்றத் தக்கவனாகத் தான்   இருப்பான். அப்படி இல்லாமல் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தொண்டனும் தலைவனும்  மக்களைச் சுரண்டும் போது நாட்டில் முன்னேற்றம் என்பது பெயரளவிற்குத்தான் இருக்கும்.

                       இந்தியத்திருநாடு  சுதந்திரம் பெற்றபின் இந்த  68 ஆண்டுகளில் நமது தலைவர்கள் என்று முன் நின்றவர்களின் துணையோடு இதுவரை 73000000000000( ஆச்சரியமாக இருக்கிறதா) 73 லட்சம் கோடி கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. 

                                எங்கே இந்தப் பணமெல்லாம்?

                                 நமது தலைவர்களின்,அவர்களின் பினாமிகளின் வளர்ச்சியின்,சொத்து மதிப்பையும் கணக்கெடுத்தால்இதற்கு விடை கிடைக்கும்.

                         காமராஜரைப் போல்,அண்ணாதுரையைப் போல்,லால்பகதூர் போல்,மொரார்ஜி போல்,நந்தா போல்  தலைவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?


                         தேடுங்கள்.....கிடைத்துவிடும்.Image result for GREAT LEADERS OF INDIA PHOTOS

                                                                   
                                                       
                                                             

                                                     


    

வியாழன், 5 மே, 2016

                                                     seconds out of the ring.
                                      
                                               ( உதவியாளர்கள் வெளியேறுக )

                   மனித வாழ்க்கை ஒரு அற்புதமான அனுபவம்.அனுபவம் என்பது சுற்றுப்புறமும் சூழ்நிலையும்  மனித இனத்தில் ஏற்படுத்தும் தாக்கம்தான். இரும்பின் மேல் விழும் சம்மட்டி அடியும் கண்ணாடியின் மேல் விழும் மேல் சம்மட்டி அடியும் ஒரேவிதமான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்று எதிர்  பார்க்கமுடியாது. எப்படிப்பட்ட இயக்க சக்தி உங்களுக்குள்ளே இருக்கிறது என்பதைப் பொறுத்தே  இந்த தாக்கம் இருக்கும்.

                       வலிமையான உடலும்,அதனுள்ளே வலிமையான மனமும் உள்ளவர்களின் செயல்பாடுகள்  இந்த அனுபவம் என்ற சானைக்கல்லினால் கூர்மைப்படுத்தப்பட்டு  அடுத்த நிகழ்வை  திண்மையுடன் எதிர் நோக்குகிறது.

                        BOXING எனப்படும் குத்துச் சண்டை இராணுவத்தில் ஒரு போற்பயிர்ச்சியாகக் கருதப்படுகிறது. எதிரியைத தாக்கவும் அவனது தாக்குதலை சமாளிக்கவும  இது ஒரு அற்புதமான  பயிற்சியாகும்.

                            இந்தப் போட்டியில்  போட்டியாளர்களும் அவர்களது உதவியாளர்களும் Boxing ring உள்ளே நுழைந்து  போட்டியாரம்பிக்க சிறிதுநேரம் வரை ஊக்கம் கொடுத்தபின் நடுவர் seconds out of the Ring என்று ஆணை இட்டு போட்டியை ஆரம்பிப்பார்.

                                     இப்பொழுது இரு போட்டியாளர்களும் நிற்பதுபோலவே நமது வாழ்க்கை இருக்கிறது.உதவியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில்  இனி போட்டியாளர்கள்தான் அவர்களது தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும்.

                                  இதுதான் மனித வாழ்க்கை.உற்றார் பெற்றோர் உறவுகள் நண்பர்கள் என்று எவ்வளவு இருந்தாலும் நாம்தான் நமது வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

                                 தாமே தமக்கு சுற்றமும்
                                                தாமே தமக்கு விதிவகையும்
                                 யாமார் எமதுயார் பாசம் ஆர்
                                                என்ன மாயம் இவை போகக்
                                  கோமான் பண்டைத் தொண்டரோடும்
                                                அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
                                   போம் ஆறு அமைமின் பொய் நீக்கிப்
                                                  புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.
                                                                                   திருவாசகம்-யாத்திரைப் பத்து.

                         
                                 Seconds out of the Ring  என்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

புதன், 4 மே, 2016

                                                      மண்ணின் பெருமை.

        மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே.

                                 நிலம்,நீர்,நெருப்பு,காற்று, மற்றும் ஆகாயம் என்ற இந்த பஞ்ச பூதங்களில் நிலம் என்ற இந்த மண்ணே பெரும் பங்கு வகிக்கிறது.
                               ஆகையினால்மனிதர்களின் செயலாக்கத்தில் மண் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அதாவது அவர்கள் பிறந்த மண். உலகம் முழுவதும் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்-இருக்கிறார்கள்-இனியும் பிறந்து வருவார்கள்.

                             நல்ல விளைச்சல் வேண்டும் என்று எதிர்பார்க்கும் விவசாயிகள் முதலில் விலை நிலத்தைத் தயார்படுத்தவேண்டும் என்பதில் தவறுவதில்லை.துரதிர்ஷ்ட்டவசமாக விவசாயம் பற்றி ஏதும்  தெரிந்துகொள்ளாமல்  அல்லது ஏட்டறிவுடன் வயலில் இறங்குபவர்கள் என்ன விளைச்சல் கண்டுவிடமுடியும்?இயற்கையின் வரப்பிரசாதமாக எங்கோ வளமான மண்ணில் விழும் விதைகள் செழிப்பாக  வளருவதுபோல்  எங்கோ ஓரிரு மாமனிதர்கள்  அவர்களது  பூர்வ புண்ணிய பலனாகப் பிறந்து  ஊரும் நாடும் பெருமைப் பெறச் செய்கிறார்கள்.

Image result for tamilnadu agriculture photos

                                                      

                          ஆனால்"மனம்" என்ற மண்ணை எண்ணங்கள் என்ற ஏர்பூட்டி மேலும் கீழும் புரட்டிஎடுத்து  கல்வி,பெற்றோர்களின் நல்லாசி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற எரு எட்டு  வெள்ளாமை காண யார்வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் என்பதுதான் இயற்க்கை நியதி.

                              மயிலாடுதுறைக்கு அருகில் நடுத்திட்டு என்ற கிராமத்தில் 11-7-1925 ல் ரங்கநாதன் என்ற ஆண்குழந்தை பெற்றோருக்கு நான்காவதாகப் பிறந்தான். சில நாட்களில் குடும்பம்  "திருவேட்களம்" என்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  அருகிலுள்ள ஊருக்கு இடம் பெயர்ந்தது. சிறுவன் ரங்கநாதன் அண்ணாமலைப் பல்கலைக்கழகப்  பேராசிரியர்கள் வேங்கடசாமி நட்டார்,சர்க்கரைப்புலவர்,டாக்டர் ரா,பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரப் பாரதியார் போன்றோர்க்குப் பால் கொண்டு செல்வது வழக்கம்.மாலைநேரத்தில் கிராமப்புற வளர்ச்சிக்குச் செல்லும் விபுலானந்த அடிகளாருக்கு ஹரிக்கேன் விளக்கு எடுத்துச்செல்வான் .1942 ல் S.S.L.C. எழுதிய ரங்கநாதன்  தேர்வில் தோல்வி யடைந்தான்.

                         இந்த ரங்கநாதன் தான் பிற்காலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த பசுமை புரட்சி கண்ட ஒரு மடாதிபதியானார் என்பது படிப்போர்களை வியப்படையவைக்கும்.

                         வாதாபி போரில் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட படைத்தலைவர் பரஞ்சோதி  பின் நாளில் பிள்ளக்கறிசமைத்த சிறுதொண்ட நாயனார்  என்று புகழ்பெற்ற ஊர் திருச்செங்கட்டான்குடி

                     சோழ மன்னனின் படைத்தலைவன்  கருணாகரத் தொண்டைமானின் மாபெரும் கலிங்க வெற்றியை "கலிங்கத்துப் பரணி"என்ற காவியமாகப் படைத்தப் புலவர் செயங்கொண்டார் பிறந்த ஊர்  தீபங்குடி.

                    இந்த இரண்டு ஊர்களும்  இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 km.

                         இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையிலிருப்பது "சன்னாநல்லூர்"

                                                     இதுவே நாளை சரித்திரம் படைக்கப் போகிறது.

Image result for tamilnadu village agriculture photo


செவ்வாய், 3 மே, 2016

                                        எண்ணத்தளவே   வாழ்க்கை.

                மனிதஉடலின்  தலைமைச்செயலகமாக  இயங்கும்  மூளையின் செயல்பாடுகள்  இவ்வளவுதான் என்று எந்த வல்லுநர்களாலும் வரையறுத்துச் சொல்லமுடிவதில்லை.இயக்குபவன் எந்த அளவுக்கு உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் கட்டளை இடுகிறானோ அந்த அளவு அவனது செயல்கள் வெற்றிபெறுகின்றன.
                    உடலின் இயக்கத்தைப் பற்றியும் அதில் இயங்கும் உயிரின் ஆளுமையைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஒருவன் தன்னைத்தான் படிக்கவெண்டுமேயொழிய அந்த அறிவைப்பெற வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை.
                             
                             பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியரின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? அறிவாளியாக ஆகவேண்டும் என்பதா?.அறிவு என்பது வெளியில் தேடுவதில்லை.அது ஒரு ஆன்ம உணர்வு.அது தன்னுள்ளேயே கிளர்ந்து எழவேண்டும்.

                                குழந்தையின் ஏழு வயதிற்குள் மூளை முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது.அதன்பிறகு அக்குழந்தையின் செயலாக்கம் அது எந்த அளவுக்கு மூளையை உபயோகப்படுத்துகிறதோ அதைப்போருத்தே  அந்த செயல் சிறக்கிறது.

                        உளவியல் வல்லுநர்களும் மூளை ஆராயிச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களும்  வியக்கத்தக்க ஆய்வுகளை எழுதிவருகின்றனர்.

                  A harmonious association of powers,simultaneous and quick concentration of all sences leads to success unknown to history.என்கிறார்கள்.
                 அதாவது ஒரு மனிதன் தனது  ஐம்பொறிகளின் செயல்பாட்டையும் ஒருங்கிணைத்து  சூரிய ஒளியை ஒருங்கிணைத்துப் பாய்ச்சும்  குவிக்கண்ணாடியைப்போல் ஒரு செயலில் ஈடுபடுத்தும்போது  அந்த செயல் கற்பனைக்கும் எட்டாத அளவு வெற்றிபெறுகிறது.

                     தானே தனக்கு உந்து சக்தியாகவும் ,முயற்சி,தீவிர முயற்சி,விடா முயற்சி என்று தொடர்ந்து செயல்படும் ஒருவன் சரித்திரம் படைக்கிறான் என்பதுதான் உண்மை.
Profile of a human head with a colorful symbol of neurons in the brain  - stock vector

திங்கள், 2 மே, 2016

                                             யாருடைய  குழந்தை.

                      பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
                       மக்கட் பேறல்ல பிற.
ஒருவர் பெறக்கூடிய பதினாறு செல்வங்களுள் மக்கட் பேரும் ஒன்றாகும்.கணவன் மனைவி உடல் உறவு கொள்வதனாலேயே குழந்தை பிறந்துவிடும் என்பது தவறாகும்.பெற்ற்றோர்கள் கர்மவினை
பிறப்பெடுக்கவேண்டிய உயிரின் கர்மவினை ஆகியவற்றைப்பொறுத்தெ ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறவி எடுக்கிறது

                       " மானிடப் பிறப்பினுள் மாதாஉதிரத்து" என்ற மாணிக்கவாசகரின் போற்றித்திரு அகவல்
இங்குகுறிப்பிடத்தக்கது.

                             இப்படித் தாங்கொனாத்துயரத்துடன் இம்மண்ணில்வரும் குழந்தை தாயிடம் எந்த மாற்றத்தையும்  ஏற்படுத்துவதில்லை.ஒரு ழுமையிலிருந்து வந்த முழுமை.எடுத்ததும் முழுமை,எஞ்சியதும் முழுமை


                       ஒரு உயிரின் வளர்ச்சிக்கு உடல் தேவைப்படுகிறது.உயிர் வளர்ச்சி முழுமைபெறும்முன்னே உடல் மரிக்க நேர்ந்தால் உயிர் மற்றொரு உடல் தேடுகிறது.உயிரின் வளர்ச்சியை திருமூலர்

                           நான்கண்ட வன்னியும் நாலுகலை எழும்
                           தான் கண்டுகொண்ட வாயுச் ச்ரீரமுழுதொடும்
                           ஊண் கண்டுகொண்ட உணர்வும் மருந்தாக
                           மான் கன்று நின்று வளர்கின்றவாறே
                                                                  என்று விளக்குகிறார்.இப்போவுலகில் உயிரின் வளர்ச்சி பலவிதமான மாய சக்திகளுக்கும் ஈடுகொடுத்து வளரும் பொழுது குழந்தை நல்லவன்,கெட்டவன்,வீரன்,தீரன்ஏழை,பணக்காரன் போன்ற உரு எடுத்து வளர்கிறது.

                                    இதில் பெற்றோர்கள் பங்கு எங்கே இருக்கிறது.?

                குயிர் குஞ்சு முட்டையை காக்கைக் கூட்டு இட்டால் 
               அயர்ப்பின்ரி காக்கை வர்க்கின்றதுபோல்........
உயிர் வளர்கிறது.இப்படி வளரும் உயிர்க்கு பிரார்த்தனை,ஜபம் எல்லாம் தேவை இல்லை.மனம் விழிப்படையும் பொழுது உயிர் பெருமை பெறும்.

                              மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்ற அகத்திய மாமுனியின் பாடல் இங்கு ஒப்புநோக்க வல்லது.
 
                               இப்படி வளரும் குழந்தை எப்படி உயர்வடையும்?இறைவன் பார்த்துக்கொள்வான்.

                ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
                 தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்டு
                 அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

                                                                   சிவஞானபோதம்.
.

ஞாயிறு, 1 மே, 2016

                                                இராணுவம்  அழைக்கிறது.
             
                    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகள் முடிந்து  சிலர் மேலே படிக்கவும் சிலர் வேலை தேடவும் இருக்கும் இந்த நேரத்தில்  "இராணுவம்" என்ற அமைப்பைப் பற்றி சற்றே விளக்கமாக பேசலாம் என்று நினைக்கிறேன்.
                   இராணுவம் என்றதும் போர்க்களம் என்ற காட்சியும் வீரர்கள் போரிடும் காட்சியும் மக்கள்
மனதில் உடனடியாக எழலாம்.அது அறியாமையினால் நிகழ்வது.
                     இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதும் அதில் சிவில் வாழ்க்கையில் உள்ள பலவிதமான தொழில்துறைகளைப்போல் அதிகாரிகளுக்கும் அதிகாரிகலல்லாதோருக்கும் உண்டு என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.
                 
                        இதற்காகவே இராணுவத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய  நான் "இராணுவம் அழைக்கிறது"என்ற சிறு நூலை எழுதியுள்ளேன்.நியூசெஞ்சுவரி பதிப்பாளர்கள் போட்டுள்ள இந்த நூலை இலவசமாக நான் அனுப்புகிறேன்.தேவைப்பட்டோர் என்னைத்தொடர்பு கொள்ளவும்